•  

நீண்ட ஆயுள் வேணுமா முத்தம் கொடுங்க: ஆய்வில் தகவல்

Kissing
 
முத்தம் என்பது அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம் மட்டுமல்ல, அது ஆயுளையும் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவித்துள்ளன. முத்தத்தைப் பற்றிய ஆராய்ச்சி முடிவுகள் தினம் தோறும் வந்து கொண்டிருக்கின்றன. இதோ புதிய ஆய்வு முடிவு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்களேன்.

திருமணத்துக்கு முன்பும், திருமணத்துக்கு பின்பும் முத்தத்தை பரிமாறிக் கொள்வதில் ஏதாவது மாற்றங்கள் ஏற்படுகிறதா? என்பது குறித்து இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது முத்தத்தை முறையாக பகிர்ந்து கொள்ளும்போது அது மனிதர்களின் ஆயுளை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டது.

இங்கிலாந்தில் இளம் ஜோடியினர் வாரத்துக்கு 11 முறை முத்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர். அவர்கள் பகிர்ந்து கொள்ளும் முத்தம் மிகவும் அழுத்தமானதாகவும், அதிக நேரம் கொண்டதாகவும் இருக்கிறது. இளஞ்ஜோடியினர் 5 நிமிடங்கள் வரை முத்தம் கொடுத்துக் கொள்கின்றனர்.

அந்நாட்டில் திருமணமானவர்களில் 5ல் ஒருவர் வாரத்தில் ஒருமுறை கூட முத்தத்தை பகிர்ந்து கொள்வது கிடையாது. எப்போதாவது அவர்கள் முத்தத்தை பகிர்ந்து கொண்டாலும் அது அழுத்தமாகவோ, நீண்ட நேரம் கொண்டதாகவோ இருப்பதில்லை என்று கண்டறியப்பட்டது. அவர்கள் அதிகபட்சமாக 5 வினாடிகள் முத்தம் கொடுப்பதே பெரிய விஷயமாக உள்ளது. (திருமணத்திற்கு முன்பு அதிகம் முத்தம் கொடுத்து போரடித்திருக்கும்)

முத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதன் நன்மை குறித்து தெரிவிக்கவும் பள்ளி குழந்தைகளிடையே முத்தம் கொடுக்கும் திறமையை வளர்க்க, தேசிய பாடத்திட்டத்தின் ஒருபகுதியாக முத்தத்தை வைக்கலாம் என்று இங்கிலாந்தின் இதய பாதுகாப்பு பவுண்டேசன் பரிந்துரைத்துள்ளது.

நம்ம ஊரில் பள்ளி மாணவர்கள் முத்தம் பற்றி பேசினாலே அடி பின்னிவிடுவார்கள். இங்கிலாந்தில் முத்தம் குறித்த பாடத்திட்டமே கொண்டுவரப்போகிறார்களாம். இது எப்படி இருக்கு.



English summary
Kissing often plays an important role in relationships. "It fosters romantic compatibility," says Michael Christian, author of The Art of Kissing (published under the pen name William Cane). "The more that people kiss, the more they're able to communicate on a romantic level."
Story first published: Tuesday, May 1, 2012, 10:43 [IST]

Get Notifications from Tamil Indiansutras