•  

தொட்டு விட தொட்டுவிட தொடரும்...!

Romance Tips
 
தம்பதியர், காதலர்கள் இடையே அடிக்கடி தொட்டுப்பேசுவது அவர்களுக்கு இடையேயான அன்பை அதிகரிக்கும் என்று உளவியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அன்பாய் பேசுவதோடு அவ்வப்போடு தொட்டுக்கொள்வது அவசியமான ஒன்று என்றும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

பத்தாண்டுகளுக்கு முன்பு வரை கல்லூரியில் படிப்பவர்களோ அல்லது பணியில் இருப்பவர்களோ காதலிக்கும் போது தனியாக சந்தித்துப்பேசும் தருணம் கிடைத்தால் அதற்காகவே காத்திருந்தது போல அநியாயத்திற்கு பேசித் தீர்ப்பார்கள். அப்படி என்னதான் பேசுகிறார்கள் என்றால் ஸ்வீட் நத்திங்ஸ் என்பார்கள்.

இன்றைக்கு செல்போனின் வருகைக்குப் பின்னர் நேரில் சந்திப்பது அவசியமற்றது என்பதைப்போல மணிக்கணக்கில் பேசுகின்றனர். அதுபோலத்தான் திருமணம் நிச்சயம் செய்தவர்களும் திருமணத்திற்கு முதல்நாள்வரை அனைத்தையும் பேசி தீர்த்து விடுவார்கள். இதனால் சின்ன சின்ன ஸ்பரிசங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது.

சின்ன சின்ன ஸ்பரிசம்

காதலிக்கும் பருவத்தில், பேச்சிலிருந்து ஆரம்பிக்கும் உறவு, இன்பம் தரும் ஸ்பரிசங்களாக மெள்ள அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது. அறிந்தும் அறியாமலும் உரசிக்கொள்ளும் விரல்கள், உடலின் அங்கங்கள் ஒன்றை ஒன்று உரசிக் கொள்வதெல்லாம் அந்தப் பருவத்தின் கிக்கான விஷயங்கள். அதிலும் முதல் முத்தம் என்பது ஆண், பெண்ணை பரவச நிலைக்கே கொண்டு செல்லும்

முத்தமிடுங்கள்

திருமணத்திற்குப் பின்னர் கணவனும் மனைவியும் முதல் இரண்டு வருடங்களிலேயே பேசி முடித்துவிடுகிறார்கள். அதற்குப் பிறகு பேசுவதற்கு ஏதும் இல்லாமல், அல்லது பேசப் பிடிக்காமல் மௌனமே அவர்களின் உறவை ஆக்கிரமித்துவிடும்.

தினமும் மூன்று முறையாவது உதட்டோடு முத்தமிட்டுக் கொள்ளும் ஜோடிகளால் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடிகிறது என்கிறது அறிவியல் உண்மை. நம்மூரில் இந்தத் ‘தொடுதல்’ எனும் அற்புதமான விஷயம், வெகு சீக்கிரம் ஜோடிகளிடமிருந்து விடுபட்டு விடுகிறது. ‘தொடுதல்’ என்றால் உடலுறவு மட்டுமே அல்ல; அது சில நிமிடங்களில் முடிந்து போகிற ‘பேஸிக் இன்ஸ்டிங்க்ட்’. ஆனால், தொடுதல் எப்போதும் நிகழக் கூடியது. முத்தமிடுவது, அணைப்பது, விரல்களைப் பின்னிக் கொள்வது, உச்சி முகர்வது, கிள்ளுவது, வருடுவது, இடுப்பை அணைத்துக் கொள்வது என்று எல்லாமே அந்தத் தொடுதலில் வருகிறது.

சமூக கடமைகள்

நம்மூர் ஆண்களுக்கு பெண்ணிடம் பேசவேண்டிய இந்த மென்மையான மொழி தெரியாமல் போகிறது. பகிரங்க ரொமான்ஸ் ரகசியங்களான இந்தப் பேச்சும், சின்ன சின்ன ஸ்பரிசங்களும் பல கணவர் ஜாதிகளுக்குப் புரியாமல் போகிறது. பெண்களும் இந்தத் தொடுதல், கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் போன்ற நல்ல உறவுக்கான அடிப்படை விஷயங்களில் தொட்டாற்சிணுங்கியாகவும் இருக்கிறார்கள் என்பது மற்றொரு பிரச்சனை.

இன்றைக்கு பல தம்பதிகளைக் கவனித்துப் பார்த்தால் இதில் இருக்கும் உண்மை விளங்கும். வாழ்க்கையின் சம்பிரதாயக் கடமைகளை செய்து முடிப்பதில்தான் பெரும்பாலும் கவனமாக இருப்பார்கள். அதாவது குழந்தைகளை பெற்று அவர்களை வளர்த்து ஆளாக்குவதுதான் தலையாய கடமைபோல செயல்பட்டு அவர்களுக்கு இடையே கண்ணுக்குத் தெரியாத சுவர் ஒன்றை எழுப்பிக்கொள்வார்கள்.

அற்புதமான மருத்துவம்

தொடுதல் என்கிற இந்த ‘ஹீலிங் டச்’ மிக அற்புதமான பல சிக்கல்களைத் தீர்க்கக் கூடிய மருத்துவம். அது ஒருவகையான மசாஜ்தான். நவீன மருத்துவத்தின் தந்தை என்று போற்றப்படும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர் ஹிப்போகிரேட்ஸ்… ‘மசாஜ் மற்றும் தொடுதல் ஆகியவை பெரும்பாலான நோய்களைத் தீர்க்கின்றன’ என்று பிரசாரமே செய்தவர். ‘ஹீலிங் டச்’ எனப்படும் தொடுதல் மருத்துவம் உலகமெங்கும் மிகவும் பிரபலமானது. மனிதர்கள் ஒருவரை ஒருவர் உணர்வுப்பூர்வமாகத் தொடும்போது… மூளையில் ‘எண்டோர்ஃபின்’ எனும் ரசாயனம் சுரந்து உற்சாகமூட்டுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

ரொமான்ஸ் வளரும்

‘தொடுதல் எனும் காதலுணர்வால், மனிதர்கள் கவிஞர்கள் ஆகிறார்கள்’ என்றார் தத்துவ அறிஞர் பிளாட்டோ. கவிஞர்களாக மட்டுமல்ல, அவர்கள் நல்ல காதலர்களாகவும் ஆகிறார்கள்.

ஆகவே தம்பதியர்களே நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடுங்கள். தழுவுங்கள், முத்தமிடுங்கள், கரங்களைக் கோர்த்துக் கொள்ளுங்கள். இந்த இரண்டு ரகசியங்களையும் கடைப்பிடித்தால் உங்கள் ரொமான்ஸ் நாளுக்கு நாள் வளரும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

English summary
Touch is one of the most powerful (and often under-utilized) forms of communication and expression of affection in adult relationships. The old adage “A picture is worth a thousand words” definitely applies to touch. Loving touch has the potential to say so much.

Get Notifications from Tamil Indiansutras