•  

தினமும் செக்ஸ் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும்! - ஆஸி விஞ்ஞானிகள்

Sex
 
இடைவெளி விடாமல் தினமும் செக்ஸ் உறவு கொண்டால் ஆண்மை அதிகரிக்கும் என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது.

கணவன்-மனைவி இடையே திருமணமான சில நாட்களுக்கு செக்ஸ் உறவு மிக அதிகளவில் இருப்பது வழக்கம். பின்னர் சிறிது சிறிதாக உறவு கொள்ளும் எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விடுகிறது. இதற்கு முக்கிய காரணம், செக்ஸ் உறவு என்றால் இவ்வளவுதானா என்ற அலுப்பும் சலிப்பும்தான்.

தினமும் செக்ஸ் உறவு கொள்ளும் தம்பதிகளை பார்ப்பது மிகவும் அரிது. பொதுவாக வாரத்தில் 2 அல்லது 3 முறை மட்டுமே செக்ஸ் உறவு வைத்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதிலும் தம்பதிகளிடையே சண்டை, நோய், களைப்பு உள்ளிட்ட காரணங்களால் அந்த அளவும் நீண்ட போக வாய்ப்பு உள்ளது.

இந்த காரணங்களை எல்லாம் இல்லாவிட்டாலும் சில தம்பதிகள் வேண்டுமென்றே செக்ஸ் உறவை தள்ளி போடுகின்றனர். அதற்கு தம்பதிகள் சொல்லும் முக்கிய காரணம் தினமும் செக்ஸ் உறவு கொண்டால், உடல்நலம் குன்றிவிடும், ஆண்மைக் குறைந்துவிடும் என விளக்கம் அளிக்கின்றனர்.

இதனால் மாதவிடாய் நாட்கள் உட்பட இடைவெளிகளை இதற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறுகின்றனர். ஆனால் இது ஒரு தவறான கருத்து என ஆஸ்திரேலியா டாக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா டாக்டர் டேவிட் கிரீனிங் கூறுகையில், "நாட்கள் இடைவெளி விட்டு செக்ஸ் உறவு வைத்தால், ஆண்மை அதிகரிக்கும் என தம்பதியர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறான கருத்து. தினமும் உறவு கொண்டால் ஆண்களின் உடலில் உள்ள செக்ஸ் உறுப்புகள் சிறப்பாக செயல்பட்டு, வளமான விந்து உருவாக உதவுகிறது.

தகுந்த உணவும், மகிழ்ச்சியளிக்கும் செக்ஸ் உறவும் மனிதனின் உடலை மட்டுமின்றி மனதையும் அமைதிப்படுத்தி வாழ்நாளை அதிகரிக்கிறது. வளமான விந்துகள் உருவாகி, கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

தினமும் செக்ஸ் உறவு கொள்வதன் மூலம் மனித விந்து பைகளில் உள்ள விந்துகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஒட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது. தினமும் உறவு கொண்டு விந்துகளை வெளியேற்றுவதால், புதிய விந்து செல்கள் உருவாக்கத்திற்கு வழிவகை ஏற்படுகிறது.

ஆண்கள் உறவு கொள்ளாமல் நீண்ட நாள்கள் இருப்பதால், அவர்களின் விந்துகளில் உள்ள டிஎன்ஏ-க்கள் அதிகளவில் சேதமடைகின்றன. இதனால் நாட்கள் இடைவெளி விட்டு உறவு கொள்ளும் ஆண்களின் விந்துகள் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. வளமில்லாத விந்துகளை கொண்ட ஆண்களை தினமும் உறவு கொள்ள செய்து ஆராய்ச்சி செய்ததில், 30 சதவீதம் ஆண்களின் விந்து செல்கள் வளமானதாக மாறியது தெரியவந்தது," என்றார்.

அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த இனப்பெருக்க மருத்துவ இயல் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வு கட்டுரையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

English summary
Australian researchers are to be believed, sex every day will improve your fertility. According to a study by scientists in Australia, regular sex not only boosts male sperm quality but also helps those who suffer fertility problems to improve their chances of fatherhood.
Story first published: Saturday, October 29, 2011, 19:36 [IST]

Get Notifications from Tamil Indiansutras