ரொம்ப 'ஓட்டினால்' 'அது' குறையும்!

Cycling
 
பாஸ்டன்: 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களுக்கு விந்து அளவு குறைந்துவிடுமாம்.

பயமுறுத்தல் இல்லை... இது அமெரிக்காவின் பாஸ்டன் பல்கலைக் கழகம் விஞ்ஞானப் பூர்வமாக வெளியிட்டிருக்கும் உண்மை.

இந்தப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர் லாரன் வைஸ் 2200 ஆண்களிடம் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அதிக நேரம் உடலை வருத்தி வாரத்திற்கு 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டுபவர்கள் பிறப்பு உறுப்பு, மற்றும் சிறு நீர் கழித்தல், மற்றும் தர மற்ற விந்து போன்ற பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பது கண்டறியப்பட்டது.

அதிக நேரம் சைக்கிள் ஓட்டுவதால் அவர்களின் விந்து சக்தி குறைகிறது. எனவே வாரத்துக்கு 5 மணி நேரத்துக்குள் மட்டுமே ஆண்கள் சைக்கிள் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதே பிரச்சினை, அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் வருகிறதாம்.

சைக்கிள் ஓட்டுவது உடற்பயிற்சியின் ஒரு அங்கமாக இருப்பதாலும், இது நேரடியாக பிறப்புறுப்புடன் தொடுகையில் இருப்பதாலும் உடனடி பாதிப்புகள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

English summary
The latest Boston University research exposes that unusual cycling may reduce the sperm production and caused for many diseases.
Please Wait while comments are loading...