டைனிங் டேபிளில் மட்டும்தான் 'சாப்பிட' வேண்டுமா?

Love Life
 
உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை என்று ஒரு சினிமாப் பாட்டு உண்டு.

உடல் மட்டும் சார்ந்ததல்ல செக்ஸ், உணர்வுகளுக்கு இங்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. ஆத்மார்த்தமான அன்பின் மிகுதியில் வரும் உறவுகள் என்றென்றைக்கும் நீடிக்கும். அவசர கதியில் உருவாகும் உறவுகள் மின்மினிப் பூச்சிகள் போல, மறைந்து போய் விடும் சடுதியில்.

படுக்கையோடு முடிந்து போய் விடுவதல்ல செக்ஸ் என்பது நிறையப் பேருக்குத் தெரிவதில்லை. வந்தோமோ, போனோமோ என்ற 'ரேஞ்சு'க்கு இருப்பவர்கள்தான் அதிகம். ஆனால் அப்படி இருப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்கிறார்கள் செக்ஸ் ஆய்வாளர்கள்.

சிறப்பான செக்ஸ் வாழ்க்கைக்கு சில 'சிக்'கென்ற டிப்ஸ்களைக் கைவசம் வைத்துக் கொள்வது நல்லது .

எல்லாம் ரெடி, அப்புறம் என்ன, விளையாட வேண்டியதுதானே என்ற எண்ணத்தை முதலில் விட்டு விட வேண்டும். டைரக்டாக 'டார்கெட்'டுக்குப் போவதால் இருவருக்குமே லாபம் கிடையாது. முன்விளையாட்டுக்களுக்கு நிறைய முக்கியத்துவம் தர வேண்டும். இதெல்லாம் அந்தக் காலத்தில் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்காது. இப்போது அனைவருக்குமே முன்விளையாட்டு குறித்து நல்ல ஞானம் உண்டு என்பதால் அதுகுறித்து யாருக்கும் பாடம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனால் படுக்கையறைக்குள் மட்டுமே நடக்கும் முன்விளையாட்டுக்கள் குறித்துதான் நிறையப் பேருக்குத் தெரிந்திருக்கிறது. படுக்கைக்கு வெளியேயும் கூட நிறைய முன்விளையாட்டுக்கள் உள்ளன. அதைப் பற்றித்தான் இங்கு பேச்சு...

ஷாப்பிங் போங்க... செக்ஸ் உறவு செழிப்பாக இருக்க, சிறக்க, இனிக்க முதலில் தேவை ரிலாக்ஸான மனமும், நெர்வஸ்னெஸ் இல்லாத உடலும்தான். அதற்கு ஏதாவது ஒரு ரிலாக்சேஷன் தேவை. இன்று இரவு 'கால்ஷீட்' கொடுத்தாகி விட்டதா, அப்படியானால் அன்று மாலையில் லேசான ஒரு ஷாப்பிங்குக்குப் போகலாம். கடைக்குப் போய் பொருட்களை வாங்க வேண்டியதில்லை. வின்டோ ஷாப்பிங்காகவும் அது இருக்கலாம். அல்லது உங்களுக்குப் பிடிச்ச ஷேவிங் செட்டை செலக்ட் செய்து வரலாம். உங்களது துணைக்குப் பிடித்த நைட்டியோ அல்லது பிற உள்ளாடைகளையோ வாங்கலாம். ஏன் இதெல்லாம் என்றால், இதெல்லாம் மூட் உருவாக்க உதவும் என்பதால். அதற்காக அரிசி, கோதுமை, பருப்பு என்றெல்லாம் பர்ச்சேஸில் இறங்கி விட வேண்டாம்.

பாடுங்க.. உங்களுக்கு நல்ல குரல் வளம் இல்லாமல் இருக்கலாம், உங்களது துணைக்கும் கூட. இருந்தாலும் நீங்கதான் கிஷோர் குமார், அவங்க லதா. அப்படி நினைத்துக் கொண்டு ஜாலியாக எதையாவது பாட்டுப் பாடி ரிலாக்ஸ் செய்யலாம். சரி பாட வரவில்லையா, அருகில் எங்காவது அழகான இசைக் கச்சேரி நடந்தால் காலார ஒரு நடையைப் போட்டு ரசித்து விட்டு வரலாம். அதற்காக அம்மன் கோவில் விழாக்களுக்குப் போய் விடாதீர்கள். பக்தித் தீயில் தீய்ந்து போய் விடுவீர்கள்.

சமைச்சுப் பாருங்க...இப்போதெல்லாம் டிவியில் ஏகப்பட்ட சமையல் நிகழ்ச்சிகள். ஆண்கள் எல்லாம் சமையலில் இப்போது 'எக்ஸ்பர்ட்' ஆகி வருகிறார்கள். நீங்கள் 'செக்ஸ்பர்ட்' ஆக இருக்கலாம். அதேசமயம், சமையல் குறிப்புகளையும் லைட்டாக தெரிந்து வைத்துக் கொண்டால், உறவுக்குப் போவதற்கு முன்பு உங்களது கையால் சின்ன 'டிஷ்' செய்து கொடுத்தால் உங்கள் துணைக்கு சற்று நெகிழ்ச்சியாக இருக்கும்.

மேலும் நீங்கள் இருவருமே சேர்ந்து சமையலறையில் சற்று நேரம் விளையாடலாம். நீங்கள் குறிப்புகளை வாசிக்க உங்களது துணையை சமைக்கச் சொல்லுங்கள். அல்லது அவர் சொல்லச் சொல்ல நீங்கள் செய்யுங்கள். நீங்கள் செய்வது சாப்பிடுவதற்கேற்ற வகையில் இருக்கிறதா இல்லையா என்பது இங்கு முக்கியமில்லை. ரெண்டு பேரும் சேர்ந்து 'இன்டிமஸி'யை வளர்க்க ஒரு வாய்ப்பு இது, தட்ஸ் ஆல்!

ஆல்பம் பாருங்க... கல்யாண ஆல்பமோ அல்லது ஏதாவது கல்லூரி வீடியோவோ எதையாவது கொஞ்ச நேரம் போட்டுப் பாருங்கள் அல்லது ஆல்பத்தைப் புரட்டிப் பாருங்கள். உங்களது சின்ன வயது புகைப்படங்களை உங்களது துணையிடம் காட்டி குஷிப்படுத்துங்கள். அந்த சமயத்தில் ஏற்படும் உணர்வுகள் மிகப் பெரியதாக இருக்கும். மனதளவில் இருவரும் படு வேகமாக ஒன்றுக்குள் ஒன்றாக புதைவதை உணர்வீர்கள்.

ஜோக் சொல்லுங்க... உங்களது மனைவி அல்லது துணையிடம் ஜோக் சொல்லி கிளுகிளுப்பாக்க முயற்சிக்கலாம். அதற்காக ஓவராக கடித்து விடாதீர்கள். ஜாலியான ஹேஸ்யமாக அது இருக்கட்டும். ஜோக் சொன்னால் மனசு லேசாகும், அதுக்குத்தான்.

இப்படியாக இருவரும் லேசான பின்னர் ஹாலில் உள்ள சோஃபாவில் உட்கார்ந்து கொஞ்ச நேரம் ஹாயாக பேசிக் கொண்டிருங்கள். இன்னும் லேசாக உணர்வீர்கள்.

அப்புறமாக பெட்ரூமுக்குள் புகுந்து உங்களது லீலைகளைத் தொடங்குங்கள். அன்றைய உறவு ஆண்டாண்டுகளுக்கும் உங்களது மனதில் நிலைத்திருக்கும்.

ஹேப்பி ஹன்டிங்!

Please Wait while comments are loading...