நல்ல சத்தம் 'அந்த' நேரம்!

Music Sex
 
'அந்த' நேரம் பார்த்து, ஏதாவது சத்தம் கேட்டாலோ, அரவம் கேட்டாலோ, என்ன சத்தம் இந்த நேரம் என்று கடுப்பாவார்கள் சிலர். சத்தம் இல்லாமல் இருந்தால்தான் 'யுத்தம்' சிறப்பாக இருக்கும் என்பது பொதுவான ஒரு கருத்து.

இதனால்தானோ என்னவோ இரவு நேரம் அதற்கேற்ற இனிய நேரமாக வகுக்கப்பட்டதா என்று தெரியவில்லை. இப்போது மேட்டர் வேறு. 'அந்த' சமயத்தில் சத்தம் இல்லாமல் இருப்பதை விட, மனதுக்குப் பிடித்த, மென்மையான இசையை ஒலிக்க விட்டபடியே இயங்கினால், இனிமை மேலும் கூடுதலாக இருக்கும் என்று கூறுகிறது ஒரு ஆய்வு.

சிறப்பான செக்ஸ் உறவுக்கு அருமையான, ரம்யமான மெல்லிசை அல்லது மனதுக்குப் பிடித்த நல்ல பாடலை கேட்டபடியே இயங்குவதே என்று அந்த ஆய்வில் கண்டுபிடித்துள்ளனராம்.

அதேசமயம், அந்தப் பாடலோ அல்லது இசையோ இருவருக்கும் பிடித்ததாக இருக்க வேண்டும். யாராவது ஒருவருக்கு மட்டும் பிடித்து மற்றவருக்குப் பிடிக்காமல் போய் விட்டால் 'மெலடி' 'டிராஜடி'யாகி விடும் வாய்ப்புள்ளது.

சாதாரண பாடல்களாக இல்லாமல் ரொமான்டிக்கான பாடல்கள், மென்மையான இசை என தேர்வு செய்து அந்த நேரத்தில் சின்ன சப்தத்தில் ஒலிக்க வைக்கலாம். இசையோடு கலந்து செக்ஸ் உறவில் இறங்கும்போது இனிமை பல மடங்கு கூடுமாம்.

இந்த ஆய்வுக்காக சில தம்பதிகளைத் தேர்வு செய்து அவர்களை செக்ஸ் உறவின்போது குறிப்பிட்ட சில பாடல்களைக் கொடுத்து அதை இசைத்தபடியே உறவில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினர். அவர்கள் கொடுத்த 'பீட்பேக்'கின் அடிப்பைடயில், இனிய இசை, உறவை மேலும் இனிமையாக்குவதாக தெரிவித்துள்ளனர்.

செய்து பாருங்களேன் நீங்களும்...!

Please Wait while comments are loading...