செக்ஸில் ஒவ்வொருவருக்கும், அதாவது ஆண்களுக்கும், பெண்களுக்கும் எப்படியெல்லாம் டேஸ்ட் இருக்கிறது என்பதை ஒரு சர்வே நடத்தி சொல்லியுள்ளனர்.
அதில் ஆண்களைப் பொறுத்தவரை எப்போதுமே கன்னி கழியாத பெண்களுடன் உறவு வைத்துக் கொள்ளவே விரும்புகிறார்களாம்.
அதேசமயம், பெண்களோ, புதியவர்களை விட அனுபவம் மிக்க ஆண்களைத்தான் அதிகம் விரும்புகிறார்களாம்.

அனுபவம் அவசியம் மச்சான்...
பெண்களைப் பொறுத்தவரை எப்போது செக்ஸில் அனுபவம் வாய்ந்த ஆண்களுடன்தான் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார்களாம்.

ஆண்களுக்கு புதுஸ்ஸா வேணுமாம்
ஆனால் மறுபக்கம் ஆண்களோ புதிய பெண்களுடன் அதாவது கன்னி கழியாத பெண்களுடன் உறவு கொள்ளவே நாட்டம் அதிகம் உள்ளதாம்.

ஜார்ஜ் க்ளூனி மட்டும் கிடைச்சா
பெண்கள் மத்தியில் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி மீதுதான் அதிக மோகம் உள்ளதாம். அவருடன் டேட்டிங் போகவும், உறவு கொள்ளவும் பெண்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனராம்.

ஆண்களுக்கு மைலீன் ஓ.கே
அதேசமயம், ஆண்கள் மத்தியில் மைலீன் கிளாஸ், ஹோலி வில்லாபி ஆகியோர் மீது அதிக மோகம் உள்ளதாம்.

11க்குஅப்புறம்தான் ஸ்டெடி
ஆண்கள் மத்தியில் ஒரு முழுமையான பார்ட்னரை கண்டுபிடிப்பதற்குள் 11 பெண்கள் வரை பழக்கப்படுத்தி படுக்கை வரை போய் விடுகிறார்களாம். அதாவது 10ல் ஒருவர் இப்படி இருக்கிறாராம்.

பெண்கள் 10 பேர் வரை
அதேசமயம், பெண்களைப் பொறுத்தவரை 5 சதவீதம் பேர் தங்களுக்குரிய பார்ட்னரை கண்டுபிடிக்கும் முன்பு 10 ஆண்கள் வரை படுக்கையில் பகிர்நது கொள்கின்றனராம்.

சிரிச்சு சிரிச்சுப் பேசனும்ய்யா...
ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி அவர்களின் மனம் கவர்ந்தவர்கள் நகைச்சுவையாக, ஜாலியாக பேசக் கூடியவர்களாக இருக்க வேண்டும் என்று பொதுவான கருத்தைத் தெரிவித்துள்ளனராம்.

இது நம்ம ஊர் அல்ல
ஆனால் இந்த சர்வே எடுக்கப்பட்டது நம்ம ஊரில் அல்ல, வெளிநாடுகளில். எனவே இதை நினைத்து நாம் எந்த முடிவுக்கும் வந்து பயந்து போகத் தேவையில்லை.