செக்ஸ் குறித்த சிந்தனைகள் ஒவ்வொருவருக்கும் ஒரு விதமாக உள்ளது. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இதில் வித்தியாசம் உள்ளது.
செக்ஸ் சிந்தனை குறித்த புதிய ஆய்வு ஒன்றில் பெண்களை விட ஆண்கள்தான் அதிக அளவு செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்கிப் போவதாக கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பான ஆய்வை நடத்தியது ஓஹியோ பல்கலைக்கழகத்தின் உளவியல் நிபுணர்கள். 18 முதல் 25 வயதுக்குட்பட்டோரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை செக்ஸ் குறித்து சிந்திக்கிறார்கள், என்ன சாப்பிடுகிறார்கள், எவ்வளவு நேரம் தூங்குகிறார்கள் என்ற கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பெறப்பட்டன. பல்வேறு புள்ளிவிவரங்களுடன் சுவாரஸ்யமான தகவல்களுடன் ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது படியுங்களேன்.

7 விநாடிகளுக்கு ஒருமுறை
இதற்கு முன்பு வரை ஆண்கள் 7 விநாடிகளுக்கு ஒருமுறை செக்ஸ் சிந்தனையில் மூழ்கிப் போவதாக கூறப்பட்டிருந்தது.

28 விநாடிகளுக்கு ஒருமுறைதான்
ஆனால் தற்போதைய புதிய ஆய்வானது ஆண்கள் 28 விநாடிகளுக்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனையில் மூழ்குவதாக கூறுகிறது.

ஒரு நாளைக்கு 34.2 முறை
ஆண்கள் ஒரு நாளைக்கு 34.2 முறை செக்ஸ் உணர்வில் மூழ்கித் திளைக்கிறார்களாம்.

பெண்கள் ரொம்ப ஸ்லோ
பெண்களைப் பொறுத்தவரை 51 நிமிடங்களுக்கு ஒருமுறைதான் செக்ஸ் சிந்தனைக்குள் புகுகிறார்களாம்.

ஒரு நாளைக்கு 18.6 முறை
அதாவது ஒரு நாளைக்கு 18.6 முறைதான் அவர்கள் செக்ஸ் சிந்தனையில் திளைக்கிறார்களாம்.

8 மணி நேரத் தூக்கம் கட்டாயம்
அதேபோல 8 மணி நேரத் தூக்கத்தையும் பெண்கள் உறுதிப்படுத்திக் கொள்கிறார்களாம். அதில் சமரசம் செய்வதில்லையாம்.

அதிகபட்சம் 140 முறை
பெண்களைப் பொறுத்தவரை அதிகபட்சம் ஒரு நாளைக்கு 140 முறை செக்ஸ் உணர்வில் வீழ்கிறார்களாம். இது சராசரியாக 7 நிமிடங்களுக்கு ஒருமுறையாகும்.

சராசரியாக 15.3 முறை
அதேபோல பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 15.3 முறை செக்ஸ் உணர்வைப் பெறுகிறார்கள். அதாவது 62 நிமிடங்களுக்கு ஒருமுறை.

13.4 முறை தூக்க உணர்வு
அதேபோல ஒரு நாளைக்கு சராசரியாக 13.4 முறை தூக்க உணர்வைப் பெறுகிறார்களாம். அதாவது 72 நிமிடங்களுக்கு ஒருமுறை.

ஆண்கள் ஒரு நாளைக்கு 514 முறை
ஆண்கள் ஒரு நாளைக்கு 7 விநாடிகளுக்கு ஒருமுறை செக்ஸ் உணர்வை அடைவதாக இருந்தால் சராசரியாக அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 514 முறை செக்ஸ் உணர்வில் மூழ்குவதாக வருமாம்.

25 முறை சாப்பாடு ஞாபகம்
ஆண்கள் ஒரு நாளைக்கு 25.1 முறை சாப்பாடு குறித்து சிந்திக்கிறார்களாம். தூக்க உணர்வு 33 நிமிடங்களுக்கு ஒருமுறை வருகிறதாம்.

ஆண்களுக்குத்தான் ஆசை அதிகம்
ஆண்களுக்குத்தான் செக்ஸ் உள்ளிட்ட உடல் சம்பந்தப்பட்ட அத்தனையிலும் விருப்பம் அதிகமாக இருக்கிறதாம்.

59 சதவீத ஆண்கள் பலமுறை
59 சதவீத ஆண்கள் ஒரு நாளைக்கு பலமுறை செக்ஸ் குறித்து சிந்திக்கிறார்களாம்.

பெண்கள் 45 சதவீதம்தான்
பெண்களைப் பொறுத்தவரை 45 சதவீதம் பேர்தான் பலமுறை செக்ஸ் உணர்வில் மூழ்குகிறார்களாம்.
வாழ்க்கையில் செக்ஸ் என்பது முக்கியமானது என்பதையே இந்த ஆய்வு காட்டுவதாக கூறுகிறார்கள் ஆய்வில் ஈடுபட்டவர்கள்.