லண்டன்: பெண்ணுறுப்பையும் இப்போது டிசைன் செய்ய ஆரம்பித்து விட்டார்களாம் இங்கிலாந்தில். பெண்கள், தங்களுக்குப் பிடித்த மாதிரி தங்களது பெண்ணுறுப்பை வடிவமைத்துத் தரும் ஆபரேஷன் அங்கு பிரபலமாகி வருகிறதாம்.
பெண்களுக்கு எப்போதுமே பெண்ணுறுப்பு குறித்த அக்கறையும், கவலையும், ஆர்வமும் அதிகமாகவே இருக்கும். பெண்களுக்கு இருக்கிறதோ இல்லையோ ஆண்களுக்கு எப்போதுமே அதில் ஒரு இருக்கத்தான் செய்கிறது.
இதைப் பயன்படுத்தி தற்போது இங்கிலாந்தில், பெண்ணுறுப்பை பிடித்தாற் போல டிசைன் செய்து தரும் ஆபரேஷன்கள் அங்கு பிரபலமாகி வருகிறதாம்.

லேபியோபிளாஸ்டி
லேபியோபிளாஸ்டி என்று இதற்குப் பெயர் வைத்துள்ளனர். அதாவது பெண்ணுறுப்பின் உட்புறப் பகுதியான லேபியாவின் அளவையும், வடிவமைப்பையும் நமக்கு பிடித்தாற் போல மாற்றும் அறுவைச் சிகிச்சை இது.

3வது உலக நாடு
இதுபோன்ற அறுவைச் சிகிச்சையில் தற்போது இங்கிலாந்து உலக அளவில் 3வது நாடாக பிரபலமாகி வருகிறதாம்.

109 சதவீதம் அதிகரிப்பு
இதுபோன்ற அறுவைச் சிகிச்சைகள் கடந்த 12 மாதங்களில் 109 சதவீதம் இங்கிலாந்தில் அதிகரித்துள்ளதாம்.

48 கிளினிக்குகள்
இப்படிப்பட்ட அறுவைச் சிகிச்சைகளை செய்வதற்காக இங்கிலாந்தில் 48 கிளினிக்குகள் இருக்கின்றனவாம்.

வாட்கிளினிக்
இந்த அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை Whatclinic.com என்ற இணையதளம் தனது கிளினிக்குள் மூலம் ஏற்பாடு செய்து தருகிறதாம்.

டிசைனர் வெஜைனா
டிசைனர் வெஜைனா என்ற பெயரில் இந்த அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர். இந்த அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் தங்களது பெண்ணுறுப்பு மிகவும் கவர்ச்சிகரமாக மாறி விடுவதாகவும், ஆண்களுக்குப் பிடித்திருப்பதாகவும் இதைச் செய்து கொண்ட பெண்கள் கூறியுள்ளனராம்.

கலைநயத்தோடு பாருங்களேன்
இதுகுறித்து சில பெண்கள் கூறுகையில், இதை ஆபாசமாக பார்க்கத் தேவையில்லை. கலைநயத்தோடு பார்க்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

எல்லா வயதினரும்
இந்த அறுவைச் சிகிச்சைக்காக இளம் வயதுப் பெண்கள் மட்டுமல்லாமல், வேலை பார்ப்போர், நடுத்தர வயதினர், ஏன் 50 முதல் 60 வயதுடைய பெண்களும் கூட ஆர்வத்தோடு வருகின்றனராம்.

1300 முதல் 3700 பவுண்டு வரை செலவாகும்
இந்த அறுவைச் சிகிச்சையை செய்வதற்கு குறைந்தது 1300 முதல் அதிகபட்சம் 3700 பவுண்டு வரை செலவாகுமாம்.