அதிகாலையில் அலாரம் அடித்து எழும் போது அருகில் அரைமயக்கத்தில் உறக்கத்தில் இருக்கும் மனைவியைப் பார்க்கும் போது லேசான சபலம் எழுவது இயல்புதான்.
இரவு நேரத்து கசகசப்பு இல்லாமல் அதிகாலை வீசும் தென்றல், லேசாய் கேட்கும் பறவையின் ஒலி என ரம்மியமாய் உணரச் செய்யும் காலை நேரத்தில் காதலும் இணைந்து கொண்டால் அன்றைய பொழுது மகிழ்ச்சியானதாய் தொடங்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
லேசாக தொடும்போதே சிணுங்கினாலும் கணவரின் அணைப்பில் அடங்கிப் போய் விடுவார்களாம். அலுவலகத்திற்கு செல்லவேண்டும் என்று மனதில் அலாரம் அடித்தாலும் அன்பான அணைப்பை மீள முடியாமல் கடைசியில் கணவரின் அணைப்பில் சரணடையும் மனைவிகள்தான் அதிகம்.

ரொமான்ஸ் அலாரம்
டைம்பீஸ் எல்லாம் காலாவதியாகிவிட்டது பாஸ். செல்போனில் அலாரம் வைப்பதுதான் பேஷன். எனவே இரவில் டயர்டாகி தூங்கிவிட்டாலும் அதிகாலையில் ரொமான்ஸ் வேண்டும் என்றால் மனதிற்கு பிடித்த பாடலை செல்போனில் ஒலிக்கச் செய்யுங்கள்.

இயற்கையின் ஆசீர்வாதம்
இரவு நேரத்து உறவினை விட காலை நேரத்து உறவு உற்சாகத்தை அதிகரிக்குமாம். விடிந்தும் விடியாத காலை நேரத்தில் கனவோடு உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் மீது காதலைப் பொழிவதன் மூலம் இருமடங்கு அன்பு திரும்ப கிடைக்குமாம்.

ப்ரஸ் பண்ண மறக்காதீங்க
உறக்கம் தெளிந்த உற்சாகத்தில் உடனடியாக செயலில் இறங்க வேண்டாம் சுத்தமாக பல் விலக்கிவிட்டு ப்ரஸ்சாக அணுகுங்கள். சுவாசம் புத்துணர்ச்சிதான் கிளர்ச்சியை அதிகரித்து நெருக்கத்தை ஏற்படுத்துமாம்.

ஸ்பெசலாக சாப்பிடுங்கள்
இனி உறவுக்கு சனிக்கிழமை இரவுப் பொழுதுகளை விட ஞாயிறு காலைப் பொழுதுகளை தேர்ந்தெடுங்கள் என்கின்றனர். உற்சாகமான உறவு முடிந்த உடன் ஒரு வெந்நீர் குளியல், ஸ்பெசல் டிபன் என அற்புதமான நாளாக அமையும் என்கின்றனர் அனுபவசாலிகள்.

ஆரோக்கியம் அதிகரிக்குமாம்...
காலங்கார்த்தால வேலை இல்லையா உங்களுக்கு என்று கணவரிடம் எரிந்து விழ வேண்டாமாம். காலை நேர உறவு உற்சாகம் தருவதோடு ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறதாம். டீ குடிப்பதைப் போல அழகான இசையை ரசிப்பதைப் போல மனைவியிடம் காலையில் அணுகும் ஆண்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

உறவுப் பிணைப்பு கூடும்
காலை சங்கமத்தில் ஆக்ஸிடோசின் அதிகம் சுரக்குமாம். இதன் மூலம் உடலும், உள்ளமும் ரிலாக்ஸ் ஆவதோடு கணவர் மீதான காதலும், பிணைப்பும் கூடும் என்கின்றனர் நிபுணர்கள்.

காய்ச்சல் ஓடிப்போயிரும்
காலை நேரத்தில் ரெகுலராக உறவில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி, காய்ச்சல் வராது. அப்படியே வந்தாலும் உடனே ஓடிப்போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.

நீங்கதான் அழகு ராணி
காலை நேர செக்ஸ் மன அழுத்தம் போக்குவதோடு உங்களின் சருமம், நகம், முடி ஆகியவற்றை பளபளப்பாக மாற்றுகிறதாம். இதனால் உங்களை நீங்களே அழகு ராணியாக உணர்வீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.