•  

கட்டிப்பிடிங்களேன்... அன்பு அதிகமாகும்... மூளையும் சுறுசுறுப்பாகும்!

Love
 
ஒருவருக்கொருவர் அன்போடு அணைத்துக் கொள்வது செலவில்லாத மருந்து என்று இன்றைய மருத்துவ உலகம் தெரிவிக்கிறது. டென்சனோடு இருப்பவர்களை ஆசையோடு கட்டி அணைத்தால் அவர்களின் கோபத்தையும், டென்சனையும் குறைக்கலாம் என்று கூறப்பட்டு வந்த நிலையில் இப்போது ஆச்சரியப்படத்தக்க ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.



அன்பானவர்களை கட்டிப்பிடிப்பதன் மூலம் ரத்தக் கொதிப்புகுறைவதோடு நினைவாற்றல்அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் உறுதியாகத் தெரிவிக்கின்றனர்.



அன்பை வெளிப்படுத்தும் வழி ஆசையோடு கட்டி அனைப்பதுதான். காதலர்களோ, தம்பதியர்களோ அணைப்பது ஒருவகை. தாய் குழந்தையை அணைப்பது மற்றொரு வகை. இவர்கள் ஆசையோடு அணைத்துக் கொள்வதன் மூலம் உறவு பலப்படுவதோடு பல நன்மைக்கள் இருக்கின்றன என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.



வியன்னா பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் முடிவில், தோழமையான உறவை கட்டி தழுவும் போது, இரத்ததில் உள்ள ஆக்ஸிடாஸினின் ஹார்மோன் சுரப்பியால் ரத்த ஓட்டம் சீர் அடைகிறது என்று தெரியவந்தது.



மூளை சுறுசுறுப்பாகும்



சோர்வான மனநிலை, ரத்த கொதிப்பு போன்ற தருணங்களில் கட்டி தழுவினால் ரத்த அழுத்தம் குறைக்குமாம், மூளை சுறுசுறுப்படையுமாம். இதற்குக் காரணம் ஆக்ஸிடாஸின் எனப்படும் ஹார்மோன் பிட்யூட்டரி சுரப்பியில் மனதிற்கு இனியவர்களை கட்டி தழுவும்போது சுரப்பதாக கூறப்பட்டுள்ளது.



மனதளவில் மாறுதல்



கட்டி அணைத்தல் என்பது பெற்றோர்களுடன், நண்பர்களுடன், காதலர்களுடன், குழந்தைகளுடன் என பல தரப்பினரிடையே வேறுப்படுகிறது.



எனவே யாரை நீங்கள் அனைக்கிறீர்கள் என்பதை முதலில் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். மனதிற்கு பிடித்தமான நண்பர்களை அணைக்கும் போதே மனதளவிலான மாறுதல் தெரியுமாம்.



கையை பிடிச்சாலே போதுமே



மனதிற்கு பிடித்தமானவரின்கையை பிடித்தாலும் இதே மனப்பாங்கை அடையலாம். அது நீங்கள் தேர்வு செய்த மனதிற்கு மிகவும் நெருக்கமான மனிதராக இருக்க வேண்டும்.



மனிதர்களை மென்மையாக்கும்



ஒருவரை கட்டி தழுவுவது உங்களை மேலும் மென்மையானவராக மாற்றும். வீட்டில் சண்டையோ, சமாதானமோ அடிக்கடி கட்டிப்பிடிங்க இது இருவருக்கிடையே அன்பை மேலும் மேம்படுத்தும்.



பரஸ்பர நேசம் முக்கியம்



ஒரு வகையில், ஒரு தாய் சேய்க்கு பாலூட்டும் போது குழந்தைக்கும் தாய்க்கும் ஏற்படும் வார்த்தைக்கு அடங்காத மனமொழியை போல அன்பானவர்களை கட்டி தழுவும் போதும் ஏற்படும் உண்ர்வும் அலாதியானது என்று அந்த ஆய்வு கூறியுள்ளது. இது நேர்மறையான விளைவுகளையே இது ஏற்படுத்தும். இருப்பினும் இதில் இருவருக்குமான பரஸ்பரம் மிகவும் முக்கியம்.



இதயநோய் வராதே



கட்டி அணைப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தம் குறைவதால் இதயம் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்கள் வர வாய்ப்பே இல்லையாம்.



மன அழுத்தம் போயிரும்



மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அணைப்பு என்பது அருமருந்து. அன்போது கட்டி அணைப்பதன் மூலம் சுரக்கும் ஹார்மோன் மன அழுத்தத்தை போக்கி ரிலாக்ஸ் ஆக மாற்றும்.



பிடிக்காதவங்களை கட்டிக்கிட்டா



அதே போல பிடிக்காதவர்கள் கட்டி கொள்ளும் போது, ஒருவரின் ஆளுமை செயல் பாதிக்கப்படும். எதிர்தரப்பில் உள்ளவர்களுக்கு பதட்டம் அதிகரித்து ஆத்திரத்தை தூண்டவும் வழிவகுக்கும்.



அத்துடன் இந்த எதிர்மறையான மனப்போக்கில் ஆக்ஸிடாஸின் சுரக்காது, அன்பும் மேம்படாது என்று நரம்புநோய் மருத்துவர் சாண்ட் க்யூளர் தெரிவித்துள்ளார்.

English summary
Hugging is an extremely positive form of communication. It expresses the values of love, approval, gratitude and forgiveness. Hugging is a great form of emotional satisfaction, but it also has some surprising health benefits.

Get Notifications from Tamil Indiansutras