50 ஷேட்ஸ் பாதிப்பு - செக்ஸியான உடற்பயிற்சியை அறிமுகம் செய்யும் நியூயார்க் ஜிம் மாஸ்டர்

Workout
 
நியூயார்க்: இங்கிலாந்தைக் கலக்கிய 50 ஷேட்ஸ் ஆப் கிரே நாவலின் தாக்கத்தால் நியூயார்க்கில் ஒரு ஜிம் மாஸ்டர் அதே பாணியில் செக்ஸியான உடற்பயிற்சி முறைகளை அமல்படுத்தியுள்ளார்.

அந்த ஜிம் மாஸ்டரின் பெயர் கிறிஸ்டன் ஜேம்ஸ். இந்தப் பெண் மாஸ்டர் 50 ஷேட்ஸ் ஆப் கிரே நாவலிலின் நாயகன் நாயகியான அனஸ்தாசியா மற்றும் கிறிஸ்டியானின் பெட்ரூமில் இடம் பெற்றுள்ள கவர்ச்சிக் காட்சிகளை அடிப்படையாக வைத்து இந்த உடற்பயிற்சி முறைகளை உருவாக்கியுள்ளார்.

பென்ட் ஓவர் பெட்டர், செக்ஸி சிஸர்ஸ், சிடெக்டிவ் ஸ்குவாட் ஆகியவை அவர் அறிமுகப்படுத்தியுள்ள சில உடற்பயிற்சி முறைகள். இதைச் செய்யும்போது உங்களுக்குள் காம உணர்வு பெருக்கெடுக்கும்,உங்களது பார்ட்னர் மீதான மோகம் அதிகரிக்க உதவும் என்று சொல்கிறார் கிறிஸ்டன்.

மன்ஹாட்டனில் உள்ள ஒரு ஜிம்மில் மாஸ்டராக இருக்கும் கிறிஸ்டன், மொத்தம் 13 செக்ஸியான உடற்பயிற்சி மூவ்களை உருவாக்கியுள்ளார். இதைச் செய்ய ஒரு சேரும், பாயும் போதுமாம்.

50 ஷேட்ஸ் நாவல் மீது மக்கள் மோகம் கொண்டு திரிவதால் அதையே அடிப்படையாக வைத்து இதை உருவாக்கி பிரபலமாகி விட்டார் கிறிஸ்டன்

Story first published: Saturday, December 1, 2012, 18:15 [IST]
English summary
A fitness expert has launched a "sexy" workout inspired by this year's best-selling erotic novel ‘Fifty Shades of Grey.' New York-based Kristen James claims that her muscle-strengthening moves will help people replicate some of Anastasia and Christian's risque bedroom scenes, the Daily Mail reported.
Please Wait while comments are loading...