இது தொடர்பாக நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பிரிட்டனின் தென்மேற்குப் பகுதியில் வசிப்பவர்கள் அதிக அளவில் காரில் காதல் கொள்வதை விரும்புவதாக கூறியுள்ளனர். அதேபோல் வேல்ஸ் பகுதியில் வசிக்கும் மூன்றில் ஒருவர் காரில் உறவில் ஈடுபடுகின்றனராம்.
இவர்கள் இப்படி காரைப் பதம் பார்ப்பதால், கார்கள் சீக்கிரம் பழுதடைகின்றனவாம். சில சமயம் காரின் உள் பாகங்கள் உடைந்தும் போகின்றனவாம். இது தொடர்பாக கருத்து கூறியுள்ள மோட்டார் இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி வில் தாமஸ், காருக்குள் ஏற்படும் சம்பவங்களால் பெருமளவில் விபத்து ஏற்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் இந்த கார் உறவால், டிரைவர்களின் கவனம் சிதறுவதோடு விபத்தும் நேரிடுகிறது. இவ்வாறு காரில் உறவில் ஈடுபட்டு அதனால்தான் விபத்து ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்தால் அவர்களின் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள் என்று கூறினார்.