•  

நல்லா 'விளையாடுங்க', அதுதான் பெண்களுக்குப் பிடிக்கும்!

Sex
 
உறவின்போது முன்விளையாட்டுக்களைத்தான் பெண்கள் பெரிதும் விரும்புகிறார்கள். எதைச் சரியாக செய்கிறீர்களோ இல்லையோ, முன்விளையாட்டை மட்டும் பர்பக்ட்டாக செய்ய வேண்டும் என்று பெண்கள் பெரிதும் எதிர்பார்ப்பார்களாம்.



சிலர் சில நிமிடங்களில் முன்விளையாட்டை முடிப்பார்கள். சிலர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விளையாடித் திளைப்பார்கள். நீண்ட நேரம் விளையாடும்போதுதான் பெண்களுக்கு நல்ல உச்சநிலை ஏற்படுகிறதாம்.



முன்விளையாட்டுக்களில் எத்தனையோ விதம், ரகம் உள்ளது. ஆனால் இறுதியில் கிடைப்பது என்னவோ கணக்கிட முடியாத இன்பம்தான். எனவே எப்படி செய்தாலும் அது திருப்தியாகவே முடியும். அதேசமயத்தில் சில குறிப்பிட்ட செயல்களில் ஈடுபடும்போது இன்பம் கூடுதலாக கிடைக்கும்.



முன்விளையாட்டுக்களுக்கு விரல்களின் பங்கு நிறையவே உள்ளது. தலை முதல் பாதம் வரை விரல்களால் விளையாடும்போது அந்த தொடுதலும், கூச்ச உணர்வும், பெண்களை சிலாகிக்க வைத்து சிலிர்ப்பூட்டும். அதிலும் பெண்களின் உணர்ச்சிகரமான பகுதிகளைக் குறிவைத்து விளையாடும் வித்தை உங்களது விரல்களுக்குப் பழக்கப்பட்டு விட்டால் பிறகு கேட்கவே வேண்டாம், அம்மணி முழுமையாக உங்களிடம் சரணாகதி ஆகி விடுவார்.



அதேபோல நாவால் உங்கள் துணையின் உடலெங்கும் நீங்கள் நடம் புரியும்போது இனம் புரியாத சந்தோஷமும், எக்கச்சக்க இன்பமும் பெண்களுக்குக் கிடைக்கும். உங்கள் துணையின் உணர்ச்சிகரமான பகுதிகளில் நாவால் வருடுங்கள், கழுத்து, பின்பக்கக் கழுத்து, தொடைகள் உள்ளிட்ட பகுதிகளில் நாவை உலாப் போக விடுங்கள். பிறகு பாருங்கள், உங்கள் உறவு திருவிழாக் கோலம் பூணுவதை.



இப்படி நிறைய இருக்கிறது. எடுத்த எடுப்பிலேயே உறவுக்குள் நுழைவதை விட இதுபோன்ற முன்விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்போது உறவும் திருப்திகரமாக இருக்கும், இன்பமும் பரிபூரணமாக இருக்கும்.




English summary
Foreplay is loved by women. Be it for few minutes or for an hour, foreplay spices up sex to a greater extent. This is because women take time to get highly excited. This is where foreplay plays a vital role in turning on a woman. If you are thinking to indulge in foreplay with your woman, try these moves to add a spicy touch to your sex life.
Story first published: Sunday, October 7, 2012, 16:48 [IST]

Get Notifications from Tamil Indiansutras