நுகரும் வயகரா ... இது லேடீஸ் ஸ்பெசல்!!

Nasal Spray
 
ஆண்களுக்கு மட்டும்தான் தாம்பத்ய உறவில் உற்சாகத்தை ஏற்படுத்த புதிது புதிதாக மாத்திரைகள் வரவேண்டுமா என்ன .. பெண்களுக்கும் கண்டுபிடிக்கிறோம் என்று கிளம்பிய கனடா நாட்டைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனம் ஒன்று, பெண்களுக்கான புதிய வயாகராவை கண்டுபிடித்துள்ளது.

உலக அளவில் திருமணமான பெண்களில் மூன்றில் ஒருவருக்கு தாம்பத்திய உறவில் முழு திருப்தி ஏற்படுவதில்லை என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இவர்களுக்காகவே இந்த உற்சாக மருந்தினை கண்டறிந்துள்ளது கனடா மருந்து தயாரிப்பு நிறுவனம். தாம்பத்திய உறவுக்கு சற்று முன்பு இதை மூக்கு வழியாக நுகர வேண்டுமாம். இதன் மூலம் உறவில் திருப்தி கிடைக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

இது பெண்களுக்கு என்றே பிரத்யகமாக உருவாக்கப்பட்ட வயாகரா ஆகும். 30 வயது முதல் 40 வயதுள்ள இளம்பெண்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் என்கிறார் கனடா மோனாஷ் பல்கலைக்கழக பெண்கள் சுகாதார நல ஆராய்ச்சி திட்ட பேராசிரியர் சூசன் டாவிஸ்.

பெண்களுக்காக விசேஷமாக தயாரிக்கப்பட்ட இத்தகைய மருந்து இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. விரைவில் இது விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
A pharmaceutical company based in Canada is developing a world-first Viagra-style drug for women.
Please Wait while comments are loading...