தம்பதியர் படுக்கை அறையில் உறவு தொடங்கு முன் மணிக்கணக்கில் முன்விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். சலிக்க சலிக்க முத்தமழையால் துணையை நனையவைக்கின்றனர் ஆனால் உறவு முடிந்த பின்னர் எதையும் கண்டுகொள்ளாமல் அம்போவென்று விட்டுவிடுகின்றனர்.
உறவு முடிந்த பின்னரும் அன்பாய் அரவணைத்து முத்தமிடவேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கின்றனராம். உறவுக்கு பிந்தைய நிலைபற்றி ஆய்வு செய்துள்ள ‘ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச்' சுவாரஸ்யமான சில கிளுகிளு சமாச்சாரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

முன் விளையாட்டில் ஆர்வம்
உறவுக்கு முன் துணையை தூண்டுவதற்காக சின்ன சின்ன விளையாட்டில் ஈடுபடுவது ஆண்களின் வழக்கம். அப்போது வெட்கப்பட்டு ஒதுங்குவது பெண்களின் வழக்கமாம்.

அன்பான அரவணைப்பு அவசியம்
170 பேரிடம் இது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதில் ஆண்களை விட பெண்கள் சில விசயங்களுக்கு முக்கியம் கொடுப்பதாக கூறியுள்ளனர். செக்ஸியான பேச்சு, முத்தம், கட்டி அணைத்தல், போன்றவைகளை விரும்புவதாக கூறும் பெண்கள் உறவுக்கு பின் அன்பான அரவணைப்பை விரும்புவதாக கூறியுள்ளனர்.

முன்னும் பின்னும் முத்தம்
உறவுக்கு முந்தைய முன் விளையாட்டின் போது முத்தமிடுவது ஆண்களுக்கு பிடிக்கும் என்றால் உறவுக்கு பின் முத்தமிடுவதை பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம்.

மெதுவாய் வருடிக்கொடுக்க ஆசை
உறவு முடிந்து, ஆண்கள் சோர்ந்து படுத்து விட்ட நேரத்தில் ஆண்களை கட்டிக் கொண்டு தூங்கவே பெரும்பாலான பெண்கள் விரும்புகிறார்கள். மெல்லியதாய் காதோரம் பேசவும், வாஞ்சையாய் தடவிக் கொடுத்து முத்தமிடவும் பெண்கள் விரும்புகின்றனராம்.

ஐ லவ் யூ அவசியம்
பெரும்பாலான தம்பதிகள் உறவிற்குப் பின்னர் ஐ லவ் யூ என்று சொல்வதை விரும்புகின்றனர். அதுவும் இறுக்கமான அணைப்பில் காதோரம் கிசுகிசுப்பாய் சொல்லவேண்டுமாம். அதன் பின் மேலும் கிக் ஏறி ஒரு ரவுண்ட் போக வாய்ப்புள்ளது.

ஆண்களுக்கு வேற வேலை...
அதேசமயம் ஆண்கள் பெரும்பாலும் உறவு முடிந்த பின்னர் சட்டென்று எழுந்து தம் போடப்போகின்றனர். சிலர் குளிக்கின்றனர், சிலர் தண்ணீர் குடிக்கின்றனராம். ஒரு சில ஆண்கள்தான் மனைவியை அணைத்தபடி படுத்து கிடக்கின்றனராம். இப்படி உறவுக்கு முந்தைய சமாச்சாரங்களை விட உறவுக்கு பிந்தைய சுவாரஸ்யமான சமாச்சாரங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளன.
உங்களுக்கு எப்படி?