இன்றைக்கு ஊடகங்களில் சிறப்பு செய்திகளாக இடம்பெறுபவை கள்ளக்காதல் செய்திகள்தான். இதனால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. கணவன் மனைவியை கொல்வது, மனைவி கணவனை கொலை செய்வது, குழந்தைகளை கொலைசெய்வது என பெரும்பாலான கள்ளத் தொடர்புகள் மரணத்தில்தான் முடிகின்றன. இந்த கள்ளத் தொடர்புகளைப் பற்றி ஆய்வு செய்த ஆய்வாளர்கள் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வரும் என்பதுதான் அது.
இது தொடர்பாக இத்தாலியில் உள்ள பிளாரன்ஸ் பல்கலைகழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
மனைவி மற்றும் காதலியை தவிர்த்து மற்றவர்களுடன் செக்ஸ் உறவு வைத்துக் கொள்பவர்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படுகிறது என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மனைவி மற்றும் காதலிக்கு தெரியாமல் கள்ளதொடர்பு வைத்திருப்பவர்களுக்கு மனரீதியாக குற்ற உணர்ச்சி ஏற்படும். இதனால் அவர்கள் எப்போதும் பதட்டத்துடன் காணப்படுவர். மேலும் செக்ஸ் உறவில் ஈடுபடும் போது ஏற்படும் அதிக பதட்டமும், ஆர்வமும் அவர்களுக்கு மாரடைப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் குடித்து விட்டு உறவில் ஈடுபடுபவர்களை அதிக அளவில் மாரடைப்பு தாக்கும் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
செக்ஸ் உறவில் ஈடுபடும்போது சில நேரங்களில் திடீர் மரணங்கள் நேரிடுவது உண்டு. அதிலும் கள்ளத் தொடர்பில் ஈடுபடுபவர்களுக்கு மற்றவர்களை விட 3 மடங்கு அதிகமாக மரணங்கள் நிகழ்வதாக ஆய்வில் தெரிந்துள்ளது.
கள்ளக் காதல் செய்பவர்கள் எதற்கும் கொஞ்சம் யோசித்துக் கொள்வது நல்லது என்கின்றனர் ஆய்வாளர்கள்.