•  

செக்ஸ் உறவுக்கு வேட்டு வைக்கும் வேலைப்பளு: அதிர்ச்சி தகவல்

Kamasutra
 
தம்பதியரிடையேயான தவிர்க்க முடியாத வேளைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட தம்பதியர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையை தொலைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.



ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான் அவர்களின் செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைத்துக்கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன்.



மனித வாழ்க்கையில் செக்ஸ் என்பது தவிர்க்க முடியாதது. இது தொடர்பான ஆய்வுகளும், கட்டுரைகளும் ஆங்காங்கே வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?' என்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.



30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந்த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இருக்கிறார்கள்.



தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேளைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் ஆய்வின் போது பெண்கள் கூறியுள்ளனர்.



கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது' என்றும் கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.



இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா 30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் இவர் மாதிரியான பெண்களின் வேதனைக்கு காரணம்' என்கிறார்.



இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள்.



பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்சில் ஆர்வம் குறைந்து விடுகிறது.



40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.



43 வயது குடும்பத் தலைவி ஒருவர் டாக்டரின் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார். நான் 20-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைக்கும் இடையே ஒரு தறி நாடா' போல ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் செக்ஸ் உணர்வுகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை' என்றார்.



இது தவிர எந்தெந்த வயதில் செக்ஸ் ஆர்வம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.



30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.



40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.



இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.



50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம்.



ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது. அரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது.



30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை இப்படித்தான் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.




English summary
A survey involving 60,000 volunteers from 200 countries has found that overall, women tend to be more moral creatures than men, and that morality starts to tick upward once women hit 30. So, women in your thirties and older, feel free to take a break from feeling pressured to marry and reproduce and be perfect at your job and have a perfect 22 year old body and a face so youthful that it looks like it was grafted from baby ass skin and give yourselves a pat on the back.
Story first published: Thursday, June 14, 2012, 10:15 [IST]

Get Notifications from Tamil Indiansutras