•  

செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் கஞ்சா!

Sex Effects Of Marijuana
 
போதைக்காக பயன்படுத்தப்படும் கஞ்சா தாவரமானது காதல் உணர்வுகளை ஊக்குவிக்கும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். 1970ம் ஆண்டுகளில் அங்கீகரிக்கப்பட்ட காதல் மருந்தாகவே இதனை ஆயுர்வேதத்தில் பயன்படுத்தி வந்துள்ளனர். தடை செய்யப்பட்ட தாவரமாக உள்ள கஞ்சா பற்றி சில சுவாரஸ்மான தகவல்கள் உள்ளன படியுங்களேன்.

புகை, மது போன்ற போதை வஸ்துக்களினால் ஆண்களின் ஆண்மை பாதிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதேசமயம் குறைந்த அளவு கஞ்சா உபயோகிப்பதன் மூலம் காதல் உணர்வுகளுக்கு உற்சாகமளிக்கிறதாம். பெண்களுக்கு சிறந்த அளவில் ஆர்கஸம் கிடைக்கிறது என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கஞ்சா உபயோகிப்பதன் மூலம் மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றங்கள் மன ரீதியான தூண்டுதல்களை ஏற்படுத்துகிறதாம். கஞ்சாவை அதிக அளவில் உபயோகிப்பதன் மூலம் மனரீதியான உடல் ரீதியான பாதிப்புகள் ஏற்படும். அதேசமயம் தாம்பத்ய உறவில் அதிகபட்ட இன்பத்தை எதிர்பார்ப்பவர்கள் குறைந்த அளவிலான கஞ்சாவை எடுத்துக்கொள்ளலாம். ஆண்மை குறைபாடு உள்ளவர்களுக்கு சிறிதளவு கஞ்சா அளித்ததன் மூலம் அவர்களால் சிறந்த முறையில் தாம்பத்ய உறவில் ஈடுபடமுடிந்தது தெரியவந்தது.

இந்தியாவில் கஞ்சாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதன் போதைக்காக கள்ளத்தனமாக உபயோகித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். உலகம் முழுவதும் 122 மில்லியன் மக்கள் கஞ்சா உபயோகிக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது.

எதுவுமே அளவாக இருந்தால்தான் ஆரோக்கியம். அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. கஞ்சாவும் அப்படித்தான். இன்பத்திற்காக பெண்கள் அதிக அளவில் உபயோகித்தால் கரு முட்டை உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும். கருவுற்றிருந்தாலும் குறைபிரசவத்தில் குழந்தை பிறக்க வாய்ப்புள்ளது என்றும் எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.

உங்களுக்கு வாழ்க்கையின் மீது ஆசையிருந்தால் தாம்பத்ய உறவின் இன்பத்திற்காக ஆபத்தான முறையை பின்பற்றாமல் இயற்கை முறையை பின்பற்ற வேண்டும் என்பது மனநல மருத்துவர்களின் அறிவுரையாகும்.

English summary
Marijuana comes from the hemp plant called cannabis sativa and believed to have aphrodisiac properties that affects sex life. Known as the "Love Drug", there are numerous reports since the 1970's that pot use can actually enhances desire in sex and is recognized by some traditional medicine such as Ayurveda.
Story first published: Tuesday, April 10, 2012, 12:46 [IST]

Get Notifications from Tamil Indiansutras