•  

முத்தம் கொடுக்கப் போறியளா?...யோசிச்சுக்குங்க..!

Kiss
 
முத்தம் பற்றியும், அதனால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் ஒரு பெரிய பட்டியலே போட்டுள்ளனர் நம்மவர்கள். உணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன. உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம். அதாவது முள்ளை முள்ளால் எடுப்பது போல உணர்ச்சிகளை உணர்ச்சிகளால் தூண்டுவது. அதே சமயம் முத்தமிடுவதன் மூலம் நோய்கள் பரவுதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

30 வாட்ஸ் மின்சாரம்

ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம். (ஆகா மின்சார உற்பத்திக்கு இப்படி ரொமான்டிக்கான ஒரு வழி இருக்கப்பா..இத விட்டுட்டு எங்கெங்கையோ கரண்ட்டை தேடுறாய்ங்களே..)

மனிதர்கள் தங்கள் உடலில் அதிகமாக உள்ள கலோரிகளை குறைப்பதற்கு என்னென்னவோ உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். ஆனால் ஆணும் பெண்ணும் சேர்ந்து 15 நிமிடம் தொடர்ந்து கொடுத்துகொள்ளும் இதழ் முத்தத்தில் 30 கலோரிகள் குறைகிறது. இது அரைமணி நேராம் மாய்ந்து மாய்ந்து நடக்கும் நடைபயிற்சிக்கு சமமானது. முத்தம்தான் உடலுறவுக்கான முதல் தூண்டுதல். உதடு பிரியாமல் கன்னத்தில் கொடுக்கும் முத்தத்தைவிட, உதடு பிரிந்து உதடுகளில் கொடுக்கும் முத்தத்திற்கு ஆரோக்கியம் அதிகம்.

முத்தம் மூலம் நோய் பரவும்

அதே சமயம் முத்தம் கொடுப்பதன் மூலம் நோய்கள் பரவுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் லயோலா பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் முத்தம் மூலம் ஹெச்1என்1, சளி, காய்ச்சல், வைரஸ் நோய்களை பரப்புகிறதாம். அதுவும் இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் அதிக அளவிலான இளைய தலைமுறையினர் இந்த நோய்தாக்குதலுக்கு ஆளாவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குளிர் காலத்தில் தொற்றுநோய்கள் பரவுவது ஒருபுறம் இருக்கையில் முத்தமிடுவதன் மூலமும், ஜோடியாக ஷாப்பிங்மால், சினிமா தியேட்டர், ஓட்டல்கள் போன்ற இடங்களுக்கு செல்வதன் மூலமும் தொற்றுக்கிருமிகள் எளிதில் பரவி நோய் தாக்குதல் அதிகமாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காலத்தில் நோய் பரவுவதை தடுக்க சத்தான பழங்கள், டானிக்குகள் போன்றவைகளை உட்கொள்ளலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

எனவே உதடுகளை ரெடி செய்வதற்கு முன்பு ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிச்சுக்குங்க..அம்புட்டுதேன்..!



English summary
Mononucleosis, or mono, is the prototypical “kissing disease,” and sexually-transmitted diseases are infamous following some romantic interludes.
Story first published: Tuesday, February 14, 2012, 17:20 [IST]

Get Notifications from Tamil Indiansutras