•  

பாலியல் தொழிலாளர்களுக்கு காண்டம் வேண்டாம்-கல்வி தாருங்கள் ஜமீலா கோரிக்கை

Nalini Jameela
 
பெங்களூரு: பாலியல் தொழில் செய்பவர்களுக்கு 'காண்டம்' வழங்குவதை விட்டு விட்டு அவர்களுக்கு கல்வி போதனை அளியுங்கள், வாழ்வளியுங்கள் என்று கேரளாவைச் சேர்ந்த முன்னாள் பாலியல் தொழிலாளியும், தற்போதைய எழுத்தாளருமான நளினி ஜமீலா கோரிக்கை விடுத்துள்ளார்.

உரிமைகளை வழங்கவேண்டும்

பெங்களூரில் நடந்த தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சார்வில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய நளினி, பாலியல் தொழிலாளர்களுக்கு காண்டம் கொடுத்து எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை விட அவர்களுக்கு தேவையான உரிமைகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவும் வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

ஹெச்ஐவி குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்வதில் பாலியல் தொழிலாளர்களின் பங்கு முக்கியமானது என்றும் நளினி குறிப்பிட்டார்.

வாழ்க்கை கதை

நளினி தன் சொந்த வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் பற்றி எழுதியுள்ள “ஒரு லைஞ்னக தொழிலாளியோட ஆத்மகதா" என்ற புத்தகம் விற்பனையில் சிறந்த சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புத்தகம் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த கேரள அரசுக்கு உதவிகரமாக உள்ளது.

English summary
"Don't just give us condoms, give us life," said Nalini Jameela, Kerala-based writer and former sex worker, echoing sentiments of several prostitutes on government related policies related to the community.
Story first published: Monday, June 13, 2011, 15:59 [IST]

Get Notifications from Tamil Indiansutras