ஸ்பெயினில் 'ஒளிரும்' விபச்சாரம்!

Prostitutes with Fluorescent Jackets
 
இரவு நேரங்களில் சாலையோரங்களில் விபச்சாரத்திற்காக நிற்கும்போது ஒளிரும் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் என விபச்சாரப் பெண்களுக்கு ஆணையிடப்பட்டுள்ளது-இங்கல்ல, ஸ்பெயினில்.

சாலை விபத்துக்களில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் இருப்பதால் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு விபச்சாரப் பெண்களை அறிவுறுத்தியுள்ளது, ஸ்பெயின் அரசு.

இதுபோன்ற உடைகளை அணியாமல் பணியில் இருந்த விபச்சாரப் பெண்களைப் பிடித்து அவர்களுக்கு தலா 55 டாலர் அபராதமும் விதித்துள்ளனர் அதிகாரிகள். இந்த உத்தரவு, ஸ்பெயினின் கடோலினியாவின், எல்ஸ் அலமஸ் என்ற நகரில் அமல்படுத்தப்பட்டு வருகிுறதாம்.

அங்குள்ள எல்எல் 11 என்ற நெடுஞ்சாலையில்தான் பெரும்பாலும் விபச்சாரப் பெண்கள் அதிகம் புழங்குவது வழக்கம். இங்கு பெருமளவில் வாகனப் போக்குவரத்து நடைபெறுவதால், இரவு நேரங்களில் இந்தப் பெண்கள் விபத்தில் சிக்கி விட நேரிடுகிறது. எனவேதான் இந்த ஒளிரும் உடைகளை அணியும் திட்டத்தை அமல்படுத்தியுள்ளனராம்.

இந்த உத்தரவை போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதால் நெடுஞ்சாலையில் கஸ்டமர்களைப் பிடிப்பதற்காகப் போகும்போது மஞ்சள் நிறத்திலான ஒளிரும் ஜாக்கெட்டையும், டிரவுசரையும் விபச்சார அழகிகள் அணிய ஆரம்பித்துள்ளனராம்.

ஸ்பெயினில் விபச்சாரம் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விபச்சாரப் பெண்கள் மட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வோர் விபத்திலிருந்து தப்பிக்க ஒளிரும் உடைகளை அணிய வேண்டும் என்று கடந்த 2004ம் ஆண்டு ஒரு சட்டமே போட்டுள்ளது ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...