கர்ப்பமாக இருக்கிறேன்-'சிங்கிள்' அனுஷ்கா!

Anoushka
 
தான் கர்ப்பமடைந்து இருப்பதாக கூறியுள்ளார் பண்டிட் ரவிசங்கரின் மகளான அனுஷ்கா சங்கர். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.

ரவிசங்கரின் மகளான அனுஷ்காவும், ஜோ ரைட்டும் காதலித்து வருகின்றனர். சேர்ந்தும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இதுவரை கல்யாணம் செய்து கொள்ளவில்லை.

இந்த நிலையில் தான் கர்ப்பமடைந்துள்ளதாக அனுஷ்கா கூறியுள்ளார். இதுகுறித்து ரைட்டும், அனுஷ்காவும் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனுஷ்கா கர்ப்பமடைந்துள்ளார் என்ற சந்தோஷச் செய்தியை தெரிவித்துக் கொள்கிறோம். இதனால் ரவிசங்கர், சுகன்யா சங்கர், லின்டி ரைட் (ரைட்டின் அம்மா) ஆகியோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

கர்ப்பமடைந்திருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ள அனுஷ்கா, தான், எப்போது ரைட்டை கல்யாணம் செய்துகொள்ளப் போகிறேன் என்பதை மட்டும் தெரிவிக்கவில்லை. ஒரு வேளை குழந்தை பிறந்த பிறகு கல்யாண் செய்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுஷ்காவும், ரைட்டும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 'லிவ் இன்' உறவில் இருந்து வருகின்றனர். ஜோ ரைட் இங்கிலாந்தைச் சேர்ந்த இயக்குநர் ஆவார்.

ரைட், ரைட்...!

Please Wait while comments are loading...