•  

'சிக்'னு இருக்கனுமா? சிங்கிளாவே இருங்க!

Body Curves
 
முதுமையிலும், உரிய வளைவுகளுடன், அழகுடன், பொலிவுடன் திகழ வேண்டுமா? அப்படியானால், கல்யாணமே செய்து கொள்ளாமல் சிங்கிளாகவே இருங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

வடக்கு கரோலினா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வுதான் இதைக் கூறுகிறது. திருமணமான ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையிலான செக்ஸ் உறவால் அவர்களது உடல் பருமன் அதிகரிக்கிறது, இதனால் அழகையும், உடல் கட்டையும், பொலிவையும் அவர்கள் படிப்படியாக இழக்கிறார்கள்.

திருமணமான ஒரே வருடத்தில் ஆண், பெண்ணுக்கு உடல் எடை கூடி விடுகிறதாம்.

அதேசமயம், காதலிப்போர், இருவரும் இணைந்து வாழாமல் நட்பு ரீதியாக பழகுவோரின் உடல் எடையில் பெருமளவில் மாற்றம் வருவதில்லையாம். இவர்களை விட திருமணமானவர்களின் உடல் எடை கூடுதலாகிறதாம்.

இப்படி கல்யாணமானதும் உடல் எடை கூடுவதற்கு என்ன காரணம் என்று ஊட்டச்சத்து நிபுணர்களும் டாக்டர்களும் விளக்குகையில், கல்யாணம் செய்து கொண்ட பின்னர் பெண்கள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்களை சந்திக்கிறார்கள். இது இருவரையும் (கணவன், மனைவி) சார்ந்துள்ளது. எனவேதான் இது உடல் பருமனில் கொண்டு போய் விடுகிறது.

இதுகுறித்து டாக்டர் கே. மதன் என்பவர் கூறுகையில், ஒரு பெண்ணுக்குத் திருமணமானதும் உணர்வுப் பூரமான, ஹார்மோன் ரீதியான மாற்றங்களைச் சந்திக்கிறார். மேலும் நாம் செட்டிலாகி விட்டோம், பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற திருப்திகரமான மன நிலை வந்து விடுகிறது. நமக்குப் பிடித்தவருடன் உறவு கொள்ளும் திருப்தியும் கூடுதலாக சேருகிறது. இதெல்லாம் சேர்ந்து உடல் பருமனைக் கூட்டி விடுகிறது என்றார்.

திருமணமாகாத பெண்கள், திருமணம் செய்யாமல் வாழும் பெண்களின் உடல் எடை அவ்வளவு சீக்கிரம் பெருப்பதில்லை என்பது இந்த ஆய்வின் முடிவாகும். எப்போதும் ஒரு உஷார் நிலையில் இவர்கள் இருப்பதால் உடல் எடையில் மாற்றம் ஏற்படுவதில்லை. உடல் நலனைப் பேணுவதிலும், சிக்கென இருக்க வேண்டும் என்பதிலும் இவர்கள் கவனமாக இருப்பதும் உடல் எடை அதிகரிக்காமல் இருப்பதற்கு ஒரு முக்கிய காரணமாம்.

சிக்கென்று இருக்க சிங்கிளாய் இருப்பதே நல்லது என்ற புதுமொழியைக் கொடுத்துள்ளது இந்த ஆய்வு.

Story first published: Thursday, June 24, 2010, 18:05 [IST]

Get Notifications from Tamil Indiansutras