மன்மத லீலை: டைகர் உட்ஸுக்கு 18 வார செக்ஸ் தடை

Tiger Woods and Girls
 
லண்டன்: பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து தனது வாழ்க்கை மற்றும் தொழிலை பெரும் கேள்விக்குறியாக்கி தவித்து வரும் கோல்ப் வீரர் டைகர் உட்ஸ், செக்ஸ் அடிமைத்தனத்தில் இருந்து மீள ஒரு மறுவாழ்வு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.

அங்கு அவருக்கு 18 வார செக்ஸ் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டின் முடிவில் டைகர் உட்ஸ் செய்த மன்மத லீலைகள் குறித்த செய்திகள் வெளியாகி உட்ஸின் வாழ்க்கை மற்றும் தொழிலை முடக்கிப் போட்டு விட்டது.

பல பெண்களுடன் சரமாரியாக அவர் வைத்திருந்த செக்ஸ் உறவுகளால் அமெரிக்காவே ஆடிப் போய் விட்டது. உட்ஸ் ரசிகர்கள் அதிர்ந்து போய் விட்டனர்.

தனக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனையிலிருந்து மீண்டு வருவதற்காக மிஸிஸிப்பியில் உள்ள ஒரு செக்ஸ் மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார் உட்ஸ். அங்கு அவருக்கு 18 வார கால செக்ஸ் தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ஏற்கனவே இந்த கிளினிக்கில் சிகிச்சை பெற்ற அனுபவம் உடைய பெனாய்ட் டெனிசட் லூயிஸ் என்பவர் கூறுகையில், இந்த செக்ஸ் தெராப்பியின்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளவும், செக்ஸ் குறித்த உணர்வுகளை வெளிக்காட்டவும், ஏன் உணர்ச்சி வசப்படவும் கூட தடை விதிக்கப்படும்.

கிளினிக்கிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு 90 நாட்களுக்கு செக்ஸ் வைத்துக் கொள்ளக் கூடாது. செக்ஸ் குறித்து நினைக்கக் கூடாது, உணர்ச்சிவசப்படக் கூடாது. அதே மாதிரியான தடை உட்ஸுக்கும் விதிக்கப்படலாம் என்றார்.

மேலும், தனது மனைவி எலின் நார்டெக்ரனுக்கு கடிதம் எழுதக் கூட உட்ஸுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது.

பெனாய்ட் மேலும் கூறுகையில், உட்ஸும், அவரது மனைவியும் மீண்டும் இணைந்து வாழ விரும்பினால், இந்தப் பிரச்சனையால் ஏற்பட்ட சிக்கல்களைத் துடைக்க விரும்பினால், செக்ஸ் சிகிச்சையின்போது உட்ஸின் மனைவியும் உடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார்.

Please Wait while comments are loading...