தோட்டமும் செக்ஸ்சும்

Love Making
 
கார்டனிங் எனப்படும் தோட்ட பராமரிப்பை பொழுதுபோக்காக செய்து வந்தால் வாழ்க்கை முறை மிக ஆரோக்யமாக இருக்கும் என்று நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் ஒரு வாரத்தில் 30 நிமிடம் தோட்டத்தில் செலவழித்தால் போதும் ஆண்களுக்கு செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் என்கிறது வியன்னா மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவு.

இப்பல்கலைக்கழகம் சமீபத்தில் தங்களது ஆராய்ச்சி முடிவை ஐரோப்பாவின் முன்னணி உடல் நல பத்திரிகை வெளியிட்டுள்ளது.

அதில், தோட்டத்தில் குழி வெட்டுவது, விதை நடுவது போன்ற சாதாரண வேலைகளை வாரத்துக்கு 30 நிமிடங்கள் செய்தால் போதும் ஆண்கள் படுக்கையறையில் உற்சாகமாக செயல்படலாம்.

இதன்மூலம் செக்ஸ் வாழ்க்கையில் ஏற்படும் 3ல் ஒரு பங்கு பிரச்சனைகள் தீர்ந்துவிடும். தோட்டத்தில் இன்னும் கூடுதலாக உழைத்தால் பாதி பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

சிறுசிறு அன்றாட வேலைகளை சரியாக செய்து வந்தாலே ஆண்களின் விறைப்பு தன்மைக்கு எந்த சிக்கலும் ஏற்படாது என்பது பலருக்கும் தெரிவதில்லை என்று கூறப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...